தினமலர் நாளிதழை எதிர்த்து தென்னிந்திய நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் ரஜினி பேசியது வியப்பாக இருக்கிறது. இரண்டு வேளை சோற்றுக்காக அவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள் அது சரி என்ற தொனியில் அவர் பேசியிருக்கிறார். இது விபச்சாரத்தை நியாயப்படுத்துவதாக அமைகிறது.
கூட்டத்தில் ரஜினி பேசியது போது, ஜல்சா பண்றதுக்கோ... குஷியா இருக்கறதுக்கோ அவங்க போகல... ரெண்டு வேள... சோறுக்காக அவங்க இதை செய்யுறாங்க... என்றார்.
பத்திரிகையாளர்கள் இதுபோன்று எழுதக்கூடாது என்று சொன்னவர், இரண்டு வேளை சோறு இல்லாதவர்கள்... கூலி வேலை செய்தாவது பிழைக்க வேண்டும் என்றுதானே அவர் கூறியிருக்க வேண்டும். அதைவிட்டு இப்படி அவர் கூறியிருப்பது, அந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்னும் ஊக்கம் கொடுப்பது போல் அல்லவா அமைந்துள்ளது.
ரஜினி பேசியது நியாயமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
//ரஜினி பேசியது நியாயமா... நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...
ReplyDelete//
அநேகமாக அது ரஜினியின் சொந்த கருத்து
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in